Sunday 19 June 2016

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்


 மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போய் அகல

 பொன் நின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து பவனி எல்லாம் விளங்க

 அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு  அருள் புரிந்து

 பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே 

 51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்த கலைஞரின் சட்டம்


 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 2.10.70ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.  எனினும் பல்வேறு சட்ட வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை.


 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58 பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார்.


 அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் சென்னையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர ஸ்வாமிகள், சிரவை ஆதீனம், ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம்,  மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

 நிலவுலாவிய நீர்மலி வேணியன்

 அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

 மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்