Tuesday 10 July 2018

வள்ளலார் காட்டிய வாழ்க்கை நெறி -3

நம்பிக்கையின் மகத்துவம்-2

நம்பிக்கையின் மகத்துவம்

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலை பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமலரால் முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. சன்மார்க்க விளக்கம் தோடுடைய செவியன் பெண்பால் ஆபரணமும் ஆண்பால் விகுதியும் உடையதால் அம்மையும் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் என்பது இதன் அர்த்தம். விடை ஏறி கருணையே வடிவாக இருப்பவன் என்பது இதன் அர்த்தம். ஓர் தூவெண் மதிசூடி மன வெளியிலே உறைபவன் என்ற சாதாரண அர்த்தத்தையும், யோக மாந்தர்கள் இரவிலே சந்திரன் மறையும் வரை விழித்திருப்பர் என்ற ரகசிய அர்த்தத்தையும் உடையது. காடுடைய சுடலை பொடி பூசி யோகத்தின் முதல் பயனாய் கிடைக்கும் வெள் ஒளியாக இருக்கும் இறைவன் என்பதே இதன் அர்த்தம். ஏடுடையமலரால் முனை நாட்பணிந் தேத்த மூளையே மலராக விரிந்திருக்க அதன் நடுவிலே தீபமாக இறைவனை நினைந்து செய்யும் யோகம் என்பது இதன் அர்த்தம். அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. அறிவு நிலையில் அருள்செய்த இறைவன் என்பது இதன் அர்த்தம். என் உள்ளங்கவர் கள்வன் மேற்கண்ட விளக்கங்களை அறிந்தவர் இதற்கு தானே அர்த்தம் விளங்கிக் கொள்வர். இதேபோல் ஒவ்வொரு பாடலுக்கும் நாம் சன்மார்க்க அர்த்தத்தினை தேடி உணர்ந்து கொள்வதற்கு காலம் இல்லை. எனவே சமயத்தை உடனே விட்டுவிட சொல்கிறார் வள்ளலார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது என்றும் சொல்கின்றார். ஞானசரியை 11ஆம் பாடலில் உடைந்த சமயக் குழி நின்று எழுந்து உணர்மின் அறியா ஒரு நெறியாம் சன்மார்க்க திருநெறி பெற்று வுவந்தே என்று குறிப்பிடுகின்றார். 20வது பாடலில் பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டறிமின் என்று குறிப்பிடுகின்றார். தில்லை திருமா வளவன்