Tuesday, 11 August 2026

சன்மார்க்கத்தின் நான்கு நிலைகள்



வள்ளலார் வலியுறுத்திய நான்கு நிலைகள்


வள்ளலார் தனது திருவருட்பாவிலும் உரைநடையிலும் உபதேச குறிப்பிலும் அடிக்கடி நான்கு நிலைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் அதனை  விரிவாக பார்ப்போம்.

1. புறம்

2. புறப்புறம்

3. அகம் 

4. அகப்புறம் 

மேற்படி நான்கு இடங்களில் நான்கு அமுதங்கள் உள்ளது.  இதில் அண்டம் பிண்டம் எனப் பிரித்து எட்டாக விரியும். இதில் அண்டத்தில் உள்ள புறப்புற அமுதம் மழை.  பிண்டத்தில் உள்ள புறப்புற அமுதம் வியர்வை. 

இதனை அருட்பெருஞ்ஜோதி அகவலில் 

சக முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் அகம் புறம் முற்றுமாம் அருட்பெருஞ்ஜோதி

இதற்கு அடுத்த வரியிலும் இதனையே வலியுறுத்தி வேறு விதமாக கூறுகின்றார். 

1. சிகரம் 

2. வகரம்

3. உகரம் 

4. அகரம் 

சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும் அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

இதற்கு அடுத்த வரியில் 

1. உபரச வேதி ஒன்று

2. உபரச வேதி இரண்டு 

3. பரம் 

4. அபரம் 

இதனை உபரச வேதியின் உபயமும் பரமும் அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி என்று கூறுவார். உபயம் என்றால் இரண்டு என்று பொருள்.  அடுத்த வரியில் இதனை மந்தனம் என்று கூறுகின்றார்.  மந்தனம் என்றால் ரகசியம் என்று பொருள்.

மேற்படி நான்கு அமுத நிலைகளை மீண்டும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் உகந்த நான்கிடததும் ஓங்கிய அமுதே

இந்த நான்கு நிலைகளை பற்றி உரைநடையிலும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். 

1. நட்சத்திர ஒளி - வடக்கு பாகம் 

2. சந்திர ஒளி- கிழக்கு பாகம் 

3. சூரிய ஒளி - மேற்கு பாகம் 

4. அக்கினி ஒளி - தெற்கு பாகம் 

இதன் தொடர்ச்சியை இரண்டாம் பாகத்தில் நாளை பார்க்கலாம்.



Monday, 10 August 2026

வடலூர் ரகசியம்

 வடலூர் தர்மச்சாலை ரகசியம்


தர்மச்சாலையிலே ஒரு பகலிலே நான் செய்த யோக பலன் அனைத்தையும் அடைந்து விட்டேன் என்று வள்ளலார் கூறியுள்ளார்.  தர்மச்சாலை என்பது அனைத்து ஏழைகளும் ஜாதி மதம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் இடம்.  பசியாற்றி வைத்து அனைத்து ஆன்மாக்களும் திருப்தி இன்பம் அடையும் இடம் இந்த இடம்.  இந்த சத்திய தர்மச்சாலை கட்டிடத்தை மூன்று முறை வலம் வந்து கட்டிடத்தையே தெய்வமாக நினைத்து வணங்கினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். 


அப்படி என்ன இந்த கட்டிடத்தில் ரகசியம் அடங்கி இருக்கிறது என்று பார்ப்போம். 


மேலைநாட்டு கணக்கியல் நிபுணர்களும் கட்டிட நிபுணர்களும் கண்டுபிடித்த ஒரு விஷயம் தான் golden rectangle.  அதாவது தங்க செவ்வகம்.  இதன் அளவு 1 : 1.618.  அதாவது நீளம் ஒரு மீட்டராக வைத்துக் கொண்டால், அகலம் 1.618 இன்று விகிதத்தில் இருக்க வேண்டும்.  இந்த தங்கச் செவ்வகத்தில் ஒரு சதுரத்தை தனியாக பிரித்தால் நீதி உள்ளது ஒரு தங்க செவ்வகமாக இருக்கும்.  அந்த தங்க செவ்வகத்தில் ஒரு சதுரத்தை பிரித்தால் மீண்டும் மீதி வருவது ஒரு தங்க செவ்வகமாக இருக்கும்.  இப்படியாக போய்க் கண்டே இருக்கும்.


இதை மேலே உள்ள படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.  இந்த அமைப்பில் தான் சத்திய தர்மச்சாலை வடலூரில் கட்டப்பட்டது.  

இந்த தங்க செவ்வகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பல அபார சக்தி உள்ளது.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கல்லூரியாக இருந்த பொழுது இந்த அமைப்பில் தான் கட்டப்பட்டது.  மனிதனுடைய முகமும் மனிதனுடைய மார்பு பகுதியில் இருந்து தலைவரையும் மனிதனுடைய உள்ளங்காலில் இருந்து உச்சம் தலைவரையும் இந்த தங்கச் செவ்வகம் அமைப்பில் இருக்கும்.  நமது இரண்டு கைகளையும் தூக்கி சற்று உயர்த்தி உச்சந்தலை அளவுக்கு உயர்த்தி அதனை படமாக வரைந்தால் இந்த தங்கச்சி செவ்வகம் கிடைக்கும்.  இதனை கீழே உள்ள படத்தில் காணலாம்.



இதைப்போல் எண்ணற்ற ரகசியங்கள் வடலூரில் மறைந்துள்ளது.  அவற்றை இனி வருங்காலங்களில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தில்லை திருமாவளவன். 

9840348094


Sunday, 9 August 2026

ஜோதி தரிசனம்

 


https://youtu.be/y9nD4ucnkAw?si=p49PRWWbtmbjfzEn


  • ஜோதி தரிசனம் அல்லது ஜோதி           வழிபாடு(டிசம்பர் மாதம் 2025 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சுத்த சன்மார்க்க மாநாட்டுக்காக நான் எழுதிய கட்டுரை.  கட்டுரை வெளிவரவில்லை.  எனவே பிளாக்கரில் வெளியிடுகிறேன். )
உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கம் அடைவித்திட வள்ளலார் கண்ட எளிய வழிமுறைதான் ஜோதி தரிசனம் அல்லது ஜோதி வழிபாடு.  சுப்ரமணியம் என்ற கட்டுரையில் வள்ளலார் மனிதர்களை நான்கு வகையாக பிரிப்பார். 
1) பக்தி காண்டி 
2) கர்ம கண்டி 
3) யோகிகள் 
4) ஞானியர். 

இதில் கீழ் நிலையில் உள்ள பக்தி காண்டிகள் கடவுளை சிலா ரூபத்தில் தரிசிப்பார்கள்.  இரண்டாவது நிலையில் உள்ள கர்ம காண்டிகள் கடவுளை தீப வடிவில் தரிசிப்பார்கள்.  மூன்றாவது நிலையில் உள்ள யோகிகள் கடவுளை தங்களுக்குள்ளேயே தரிசிப்பார்கள்.  நான்காவது நிலையில் உள்ள ஞானிகள் கடவுளை எங்கும் தரிசிப்பார்கள்.  இதில் முதல் நிலையில் உள்ள பக்தி காண்டிகள் சமயவாதிகள் ஆவர்.  இவர்கள் இரண்டாவது நிலைக்கு வரும்போது அதாவது தீப தரிசனம் செய்யும்பொழுது தான் சன்மார்க்க நிலையை அடைகிறார்கள்.  கீழ் நிலையில் இருந்த நம்மை இரண்டாவது நிலைக்கு எடுத்துச் சென்று சன்மார்க்கத்தை அறிமுகப்படுத்தியவர் தான் வள்ளலார்.  அதற்குப் பிறகு மூன்றாவது நிலைக்கு நான்காவது நிலைக்கு நாம் செல்வதை கடவுளே பார்த்துக் கொள்வார்.  இந்த நான்கு நிலைகளையும் நான்கு ஒழுக்கங்களோடு நாம் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

வள்ளலார் அருளிய விண்ணப்பங்கள், பேருபதேசம், ஞான சரியை ஆகியவைகளை சுத்த சன்மார்க்க விளக்க நூல்களாக எடுத்துக் கொள்ளலாம்.  இவற்றில் ஜோதி வழிபாடு பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது.  இதனைப் படித்து புரிந்து கொண்டவர்கள் ஜோதி வழிபாட்டை புறக்கணித்து வருகிறார்கள்.  இது மிகவும் தவறு. இவர்கள் இதை ஏட்டளவில் படித்து புரிந்து கொண்டவர்களே தவிர உண்மையில் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைக்கு வந்தவர்கள் இல்லை.  படிப்பு அறிவு என்பது வேறு.  அனுபவ அறிவு என்பது வேறு.  நாம் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைக்கு வந்தாலும், வள்ளலார் நமக்கு கொடுத்த பாதையான, உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கம் அடை வைத்திட நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஜோதி தரிசனம் மிகவும் அவசியம். 

பஞ்சபூதங்களில் நடுநாயகமாக விளங்குவது தீ ஆகும்.  அதேபோல கருங்குழி, தர்மச்சாலை, மேட்டுக்குப்பம் இவை எல்லாவற்றுக்கும் நடு நாயகமாக இருப்பது ஞானசபை.  ஜோதி தரிசனமே ஞான சபையின் முக்கியத்துவம்.  இந்த ஞான சபையில் ஜோதியனை வந்து வந்து தரிசித்தால், பல மகத்துவங்களையும் அற்புதங்களையும் காணலாம் என வள்ளலார் தெரிவித்துள்ளார். 

சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன்.  சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்பது வள்ளலார் வாக்கியம்.  இப்படி அவர் சொல்லும் பொழுது அவர் மூன்றாவது நிலைக்கு வந்துவிட்டார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  அதேபோலவே நாமும் ஜோதியையும் ஞான சபையையும் நம்முள் காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  ஜோதி ஒன்றையே நினைமின், ஒளியை நினைமின், என்று பல பாடல்களில் தெரிவித்துள்ளார்.  வள்ளலார் மேல் நிலையில் நின்று நமக்கு உபதேசம் செய்த பேருபதேசம் என்ற பகுதியில் இறைவன், 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 
என்ற மகா மந்திரத்தை தானே எடுத்துக் கொண்டார் என வள்ளலார் உபதேசித்துள்ளார்.  இங்கே வள்ளலார் அருள் என்பதும் கருணை என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகள் என குறிப்பிட்டு மேலே தொடர்வார்.  ஆனால் ஜோதி என்பதை குறிப்பிடாமல் இருப்பார்.  மகா மந்திரத்தை நாம் படிப்பதும் எழுதுவது மட்டும் போதாது . அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனறால் ஒரு விளக்கில் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால்தான் முடியும்.

விளக்கை ஏற்றி வழிபாடு செய்ய அது நம்மை வெட்டவெளி வழிபாட்டிற்கு அழைத்துச் செல்லும்.  விளக்கை ஏற்றி வெளியை அறிமின் என்பது திருமூலர் வாக்கு.  வள்ளலார் தான் திருக்காப்பிட்டு கொள்வதற்கு முன் கடைசியாக தன்னுடைய அறையில் இருந்த விளக்கை கொண்டு வந்து வெளியில் வைக்கிறார்.  இந்த தீபத்தின் முன்னிலையில் ஆண்டவன் விளங்குவதாக பாவித்து ஞான சரியை என்ற தலைப்பில் உள்ள 28 பாசுரங்களை பாடி வழிபாடு செய்ய மக்களை கேட்டுக்கொள்கிறார்.  அறைக்குள் இருந்த தீபத்தை அறைக்கு வெளியே கொண்டு வந்து வைக்கிறார் என்பது ஒளி வழிபாடு ஆனது வெளி வழிபாடாக மாறும் என்ற தத்துவத்தை குறிக்க நடந்த ஒரு நிகழ்வு.  தினந்தோறும் தீப வழிபாடு என்பது நம்முடைய முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும்.  தீப வழிபாடு செய்பவர்களைத்தான் மேல்நிலைக்கு வள்ளலார் ஏற்றுவார்.  மக்களை சன்மார்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வள்ளலார் வைத்திருக்கும் ஒரு வழி இதுதான்.  தீப வழிபாடு ஒரு சத் விசாரமாக அமையும்.  முடியாத  காலங்களில் நாம் பரோபகாரத்தை செய்ய வேண்டும்.  அதாவது ஜீவகாருண்ய வசத்தராய் இருத்தல் வேண்டும்.
-- தில்லை திருமாவளவன் 
9840348094.



.

Wednesday, 14 January 2026

சன்மார்க்கத்தின் தற்போதய நிலை

 சன்மார்க்கத்தின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் 95% பேர் சங்கிகளாகவும் RSS மற்றும் BJP யை சார்ந்தவர்களாக உள்ளனர்.  இவர்கள் சமயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்.

சமயத்தை விட்டால் தான் சன்மார்க்கத்திற்கே வரமுடியும் என்பது இவர்களுக்கு புரிவதில்லை.

அதுமட்டும் அல்லாமல் இந்து மதத்தை தவிர பிற மதங்களை தாக்கி பேசும் (புற சமய தூஷனை ) நபர்களாக உள்ளனர்.

வள்ளலார் 63 நாயன்மார்கள் + 12 ஆழ்வார்கள் + 20 மதங்கள் (கிருஸ்துவம், முகமதீயம் உட்பட ) + 1 கடவுள் நிலை = 96 தத்துவங்கள் என வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பைபிளில் 7 நாட்களில் இறைவன் உலகை படைத்தான் என்று சொல்லப்படுவது குறித்து எமக்கு தெரியும் என்று சொல்லி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அனைத்து மதங்களையும் வள்ளலார் சமமாக தான் பார்த்தார்.  ஆனால் தற்போது உள்ள சன்மார்கிகள் என்று தங்களை தாங்களே குறிக்கொல்பவர்களுக்கு இது விளங்கவே இல்லை.

வெளிநாட்டில் உள்ள கிருத்துவர்களை இந்து மதத்திற்கு மாற்றி பட்டை அடித்து கொட்டை மாட்டி அசுத்த சன்மார்க்கத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

வள்ளலார் உலகர் அனைவரையும் சன்மார்க்கத்திற்கு அழைத்து வர பாடு பட்டார்.  இவர்கள் அனைவரையும் சமயத்திற்கு அழைத்து வர பாடுபடுகிறார்கள்.

அந்த அந்த மதத்தில் உள்ளவர்களை அப்படியே சன்மார்க்கத்திற்கு வரவழைப்பது தான் சன்மார்க்கம்.  அதை விடுத்து அவர்களை பட்டை அடிக்க வைத்து தான் சன்மார்க்கத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அப்படி இருந்தால் வள்ளலார் சொல்லி இருப்பாரே?

தற்போது உள்ள சன்மார்கிகள் பலரும் சாத்தன்களை போல வேலை செய்கிறார்கள்.

இவர்களிடம் மிகவும் எச்சரிக்கை தேவை.