வள்ளலார் வலியுறுத்திய நான்கு நிலைகள்
வள்ளலார் தனது திருவருட்பாவிலும் உரைநடையிலும் உபதேச குறிப்பிலும் அடிக்கடி நான்கு நிலைகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் அதனை விரிவாக பார்ப்போம்.
1. புறம்
2. புறப்புறம்
3. அகம்
4. அகப்புறம்
மேற்படி நான்கு இடங்களில் நான்கு அமுதங்கள் உள்ளது. இதில் அண்டம் பிண்டம் எனப் பிரித்து எட்டாக விரியும். இதில் அண்டத்தில் உள்ள புறப்புற அமுதம் மழை. பிண்டத்தில் உள்ள புறப்புற அமுதம் வியர்வை.
இதனை அருட்பெருஞ்ஜோதி அகவலில்
சக முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் அகம் புறம் முற்றுமாம் அருட்பெருஞ்ஜோதி
இதற்கு அடுத்த வரியிலும் இதனையே வலியுறுத்தி வேறு விதமாக கூறுகின்றார்.
1. சிகரம்
2. வகரம்
3. உகரம்
4. அகரம்
சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும் அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இதற்கு அடுத்த வரியில்
1. உபரச வேதி ஒன்று
2. உபரச வேதி இரண்டு
3. பரம்
4. அபரம்
இதனை உபரச வேதியின் உபயமும் பரமும் அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி என்று கூறுவார். உபயம் என்றால் இரண்டு என்று பொருள். அடுத்த வரியில் இதனை மந்தனம் என்று கூறுகின்றார். மந்தனம் என்றால் ரகசியம் என்று பொருள்.
மேற்படி நான்கு அமுத நிலைகளை மீண்டும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் உகந்த நான்கிடததும் ஓங்கிய அமுதே
இந்த நான்கு நிலைகளை பற்றி உரைநடையிலும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
1. நட்சத்திர ஒளி - வடக்கு பாகம்
2. சந்திர ஒளி- கிழக்கு பாகம்
3. சூரிய ஒளி - மேற்கு பாகம்
4. அக்கினி ஒளி - தெற்கு பாகம்
இதன் தொடர்ச்சியை இரண்டாம் பாகத்தில் நாளை பார்க்கலாம்.

No comments:
Post a Comment