Monday, 10 August 2026

வடலூர் ரகசியம்

 வடலூர் தர்மச்சாலை ரகசியம்


தர்மச்சாலையிலே ஒரு பகலிலே நான் செய்த யோக பலன் அனைத்தையும் அடைந்து விட்டேன் என்று வள்ளலார் கூறியுள்ளார்.  தர்மச்சாலை என்பது அனைத்து ஏழைகளும் ஜாதி மதம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் இடம்.  பசியாற்றி வைத்து அனைத்து ஆன்மாக்களும் திருப்தி இன்பம் அடையும் இடம் இந்த இடம்.  இந்த சத்திய தர்மச்சாலை கட்டிடத்தை மூன்று முறை வலம் வந்து கட்டிடத்தையே தெய்வமாக நினைத்து வணங்கினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். 


அப்படி என்ன இந்த கட்டிடத்தில் ரகசியம் அடங்கி இருக்கிறது என்று பார்ப்போம். 


மேலைநாட்டு கணக்கியல் நிபுணர்களும் கட்டிட நிபுணர்களும் கண்டுபிடித்த ஒரு விஷயம் தான் golden rectangle.  அதாவது தங்க செவ்வகம்.  இதன் அளவு 1 : 1.618.  அதாவது நீளம் ஒரு மீட்டராக வைத்துக் கொண்டால், அகலம் 1.618 இன்று விகிதத்தில் இருக்க வேண்டும்.  இந்த தங்கச் செவ்வகத்தில் ஒரு சதுரத்தை தனியாக பிரித்தால் நீதி உள்ளது ஒரு தங்க செவ்வகமாக இருக்கும்.  அந்த தங்க செவ்வகத்தில் ஒரு சதுரத்தை பிரித்தால் மீண்டும் மீதி வருவது ஒரு தங்க செவ்வகமாக இருக்கும்.  இப்படியாக போய்க் கண்டே இருக்கும்.


இதை மேலே உள்ள படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.  இந்த அமைப்பில் தான் சத்திய தர்மச்சாலை வடலூரில் கட்டப்பட்டது.  

இந்த தங்க செவ்வகத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பல அபார சக்தி உள்ளது.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கல்லூரியாக இருந்த பொழுது இந்த அமைப்பில் தான் கட்டப்பட்டது.  மனிதனுடைய முகமும் மனிதனுடைய மார்பு பகுதியில் இருந்து தலைவரையும் மனிதனுடைய உள்ளங்காலில் இருந்து உச்சம் தலைவரையும் இந்த தங்கச் செவ்வகம் அமைப்பில் இருக்கும்.  நமது இரண்டு கைகளையும் தூக்கி சற்று உயர்த்தி உச்சந்தலை அளவுக்கு உயர்த்தி அதனை படமாக வரைந்தால் இந்த தங்கச்சி செவ்வகம் கிடைக்கும்.  இதனை கீழே உள்ள படத்தில் காணலாம்.



இதைப்போல் எண்ணற்ற ரகசியங்கள் வடலூரில் மறைந்துள்ளது.  அவற்றை இனி வருங்காலங்களில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தில்லை திருமாவளவன். 

9840348094


No comments:

Post a Comment