Saturday, 16 December 2023
சன்மார்க்கம்-2
சன்மார்க்கத்தை வழி நடத்துவதற்கு அடிப்படையாக இருப்பது தயவு. தயவை எப்படி விருத்தி செய்து கொள்ள முடியும்? நம்மிடம் நிறைய பணம் இருக்க வேண்டுமா? பல பேரை நாடி சென்று பணத்தை வசூல் செய்து தயவு பெற்றுக்கொள்ள வேண்டுமா? நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வாரி கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாக வேண்டுமா? இதனாலெல்லாம் தயவு விருத்தி செய்து கொள்ள முடியாது. பிறகு எப்படி தயவை விருத்தி செய்து கொள்வது? தயவு விருத்தி செய்து கொள்ள நம்முடைய பாக்கெட்டில் இருந்து அதாவது பணத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடாது. மனதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மனதளவில் இறக்க சுபாவமும், எளியோர் படும் வேதனையைக் கண்டு மனம் பதற்றம் அடைய வேண்டும். ஏழை எளிய மக்களை இறைவா நீ காப்பாற்று, என்று விண்ணப்பம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தயவு விருத்தி ஆகும். நாம் இப்படி செய்வது சிறிய விளக்கு. இந்த சிறிய விளக்கை கொண்டு, ஆண்டவனின் தயவாகிய பெரிய விளக்கை ஏற்ற வேண்டும். அதாவது ஆண்டவனின் அருள் விளக்கை ஏற்ற வேண்டும். இப்படி செய்து கொண்டிருந்தால் நம்முடைய ஆன்மா நெகிழ்ச்சி அடைந்து நல்ல பக்குவ நிலைக்கு வரும். அதன்பிறகு ஆண்டவரோடு இணைவதற்கான பக்குவம் நமது உடலில் ஏற்படும். இதைத்தான் வள்ளலார் ஆன்ம லாபம் என்று சொல்கின்றார். நமது குடும்ப வருமானத்தை சிக்கனம் செய்து ஜீவகாருண்யம் செய்ய வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றார். தான் பட்டினி கிடந்து அடுத்தவருடைய பசியை போக்குவது ஜீவகாருண்யம் ஆகாது என்றும் வள்ளலார் கூறியிருக்கின்றார். இவற்றையெல்லாம் உணர்ந்து உண்மையான ஜீவகாருண்யம் செய்வோம். ஆண்டவரது அருளைப் பெறுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment